Monday 19 February 2018

இனி வச்சு செய்வோம் 3



அந்த ஜவஹர்லால் நேரு யுனிவெர்சிட்டி மேட்டரு என்ன ஆச்சு..? மெக்குல்லம் டெஸ்ட்ல பாஸ்ட்டெஸ்ட் செஞ்சுரி
யாமே...!  கடைசி டெஸ்ட்ல ...கில்லி மாதிரி ..BAZ இஸ் தி BAZ...!
இது மாதிரி - அன்றாட நிகழ்வுகள் - உடனுக்குடன் - இதுக்குன்னே எப்போவுமே சில பேர் இருப்பாங்க...! பக்கத்துல இருக்கிறவங்களுக்கு பீதியை கிளப்புறதுதான் இவங்க வேலையே...! பெருக்கல் வகுத்தல் வாய்ப்பாடு எல்லாம் - வாய்லேயே தான்...! பார்த்தாலே மெர்சலா இருக்கும்..! க்ளூசனர் ஆடின செமி பைனல் வேர்ல்ட் கப் மேட்ச் - மொத்த ஸ்கோர் கார்டும் , மெமரில இருக்கும்.....! ச்சே...! தேவை இல்லாம ஓடி ரன் அவுட் ஆனாங்கடான்னு இப்பவும், பினாத்திக்கிட்டே தான் இருப்பாங்க..!
நல்ல வேளை NBA , வாட்டர் போலோ ரேஞ்சுக்கு போகலை...! சந்தோசம்..!
இதே மாதிரி ஒரு நண்பர் - ஞாபக சக்தில சிங்கம், புலி,  எல்லாம் - ஆளு , விவரம்னா  விவரம்,  அப்படி ஒரு பயங்கர விவரம்...! எந்த கேள்வி கேட்டாலும் - டான் , டான்னு பதில் வரும்...!
LIC , மெடிக்ளெய்ம்  - டூ வீலருக்கு லோன் ட்யூ...! மூணு மாசம் கழிச்சு , சித்தப்பா வீட்டு கிரஹ பிரவேசத்துக்கு - இப்போவே ப்ரெசென்ட் வாங்குறது..!  ட்ரெயின் டிக்கெட் ரெண்டு மாசத்துக்கு முந்தியே புக் பண்றது , IRCTC க்கே  அல்வா கொடுத்து - தத்கால் டிக்கெட் எடுக்கிறது - இதுலே எல்லாம் அடிச்சுக்கவே முடியாது..!
ஆனால், நிஜ வாழ்க்கையில் பிஸ்தா, பாதாம் எல்லாம் கிடையாது ...!
வீட்டுல தினமும் பேச்சு வாங்கணும்..! அந்த எதிர்த்த வீட்டுக்காரி - ரெண்டு மாசத்துக்கு ஒருக்கா,எதுனா ஒன்னு புதுசு புதுசா வாங்குறா..!
அவன் இந்த வார்டு மெம்பர் மச்சினனுக்கு  - அல்லக்கை..!
பைசா புழங்கத்தான் செய்யும்..! நமக்கு எதுக்கு, அந்த மாதிரி பணம்...?
வார்டு மெம்பருக்கேவா.... அப்போ கவுன்சிலர், சேர்மன்... இவங்க எல்லாம்...? என்னதான்யா நடக்குது..?
அவன் தினம் குடிச்சிட்டு வந்து யார்கிட்டேயாவது சண்டை புடிச்சிட்டு வர்றான்..? அது மாதிரி வந்தா பரவா இல்லையா?
ஆமா நீங்க குடிச்சிட்டு வந்திட்டாலும்...! பெனட்ரில் குடிச்சாலே சுவரைப் புடிச்சிக்கிட்டே நடப்பீங்க....!
அண்ணே...  என்னதான் சொல்றாங்க அண்ணி...? குடிச்சாலும் பரவா இல்லை, ஆனா நிறைய சம்பாதின்னு சொல்றாங்களோ...?
அட, அவ என்ன சொல்றான்னு புரியலைப்பா...ஆனா, குடிக்க மட்டும் கூடாது...! இப்படிதான் கொஞ்ச வருஷத்துக்கு முன்னே , கோயம்புத்தூர்ல - ஒரு ஏரியா, ஒரு TANK நிறைய சரக்கு - எல்லா பிராண்ட் லேபிளும், அங்கேயே இருக்கு, குழாய்ல புடிச்சு , புடிச்சு - லேபில் ஒட்டி அனுப்புறாங்க..! எல்லாம் டூப்ளிகெட் ..! நேர்ல பார்த்த மாதிரியே சொல்லுவாரு ..! என் பிரெண்ட் சொன்னான்பா...! அந்த பையனுக்கு பொய் சொல்ல வராது ..!
இப்போ கூகுள் - அதுவும் ஆண்ட்ராய்ட், WHATSAPP எல்லாம் வந்ததுக்கு அப்புறம்,  பாவம் இந்த மாதிரி நண்பர்கள் எல்லோரும்  கொஞ்சம் அடக்கி வாசிக்கிறாங்க...! யாருமே இந்த அறிவு ஜீவிகளை கண்டுக்கிறது இல்லை...! ஆனால், அவங்களும் விடுறது இல்லை...!
3GB RAM வைச்சு புதுசா ஒரு மொபைல் வந்து இருக்குது, பார்த்தியா?
Freedom 251 ...! அது கான்செப்ட் கண்டுபிடிச்சதே - ஒரு சாதாரண மளிகைக் கடைக்காரர் பையன் தானாம்..! தெரியுமா..? IT ரெய்ட் நடந்தவரைக்கும் அவருக்கும் விவரம் தெரியும்..!
ஓ ! அப்படியா ?   எல்லாம் இப்போ இல்லை..!
தெரியுமே, டைம்ஸ் ஆப்ஸ்லே ஆர்ட்டிக்கிள் போட்டு இருந்தானே...!
ஆடி இன்னொரு புது கார் விடுறான் தெரியுமா..?  நேத்து ஒரு வீடியோ பார்த்தேன்...! ரோட்டுலே சும்மா , வழுக்கிக் கிட்டு போகுது..!
அண்ணே.... ! முதல்லே உங்க டூவீலர் டயரை மாத்துங்க...! நிஜமாவே வழுக்கிக்கிட்டு போகுது அது..!
அட , அவங்களும் கூகுள்ல, நெட்ல பார்த்து தான் தெரிஞ்சுக் கிட்டு இருப்பாங்க..! ஆனா, சில சுவாரஸ்ய கேள்விகளை எதிர் பார்த்து - முன்னவே தயாராகுறது... இந்த புத்தி...! ஒரு மாதிரியான போதை..! இந்த மாதிரி இருக்கிறது தப்பா..?
நாலு பேருக்கு , நல்லதுன்னா..!
ஐயையோ...!
சரி விடுங்க..!
இந்த மாதிரி இருக்கிறது நிச்சயமா தப்பு இல்லை..! ஆனால், இவ்வளவு திறமை வைச்சுக்கிட்டு , அப்படியே ஒரு வட்டம் போட்டுக்கிட்டு , பிழைக்கத் தெரியாத மனுஷன்னு பேர் வாங்கிட்டு, அந்த கம்போர்ட் ஸோன்ல இருந்து விடுவது, முட்டாள் தனம்...! இதுல என்ன கொடுமைன்னா..! பிழைக்கத் தெரியாதவன்னு கேட்டு , கேட்டு அதுவே பழகி ....அடப் போங்க சார்..!
இப்போ, என்னை எடுத்துக்கோங்க..! உலகம் சும்மா , ஜெட் வேகத்துல பறந்துக் கிட்டு இருக்கு..? புதுசு, புதுசா நாளுக்கு ஒரு Apps வருது...! இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு, WHATSAPP  - இருக்குமான்னே தெரியாது...! இருந்தாலும், இன்னமும் - பக்கம் , பக்கமா இப்படி ப்ளாக்ல கட்டுரை எழுதிக் கிட்டு இருக்கேனே...! இதை என்ன சொல்ல..? இந்த கால பசங்க கிட்ட சொன்னா, எதோ வேற்று கிரக ஜந்து மாதிரி பார்ப்பாங்க...!
யாருக்கு இதை எல்லாம் படிக்க நேரம் இருக்குது....? இருந்தாலும், தலைவன் சிங் பாணியிலே  டீ ஆத்திக்கிட்டு இருக்கிறோம்ல..!
====================================================
சரி - மேலே பார்ப்போம்..!
நாம ரோமன் சைனியைப் பற்றி எழுதிய நேரமோ , என்னமோ தெரியலை - கொஞ்ச நாளிலேயே அடப் போங்கயா, நீங்களும் உங்க வேலையும்னு ... கால் கடுதாசி எழுதிக் கொடுத்திட்டு , என் மனசுக்குப் புடிச்ச வேலையை செய்யப் போறேன்னு கெளம்பிட்டாரு..! இங்கே க்ளிக் பண்ணி படிச்சுப் பாருங்க...!
ஆனா என்ன? விட்டுட்டுப் போன வேலை நிஜமாவே பெரிய கலெக்டர் வேலை..!
அதே மாதிரி தங்கம் விலை நிலவரம் கூட..! இறங்கி ஏறும்னு சொல்லி இருந்தேன்..! அதை எத்தனை பேர் நோட் பண்ணி இருந்தீங்கன்னு தெரியலை...!
அட ... ஆமா , நீங்க எதோ சொன்னீங்க சார்...! தங்கம் விலை இறங்கி ஏறும்னு...!எதோ ஜோசியம் மாதிரி....! அது ஜோசியம் கிடையாதா...! ஏதாவது கால்குலேஷனா..? அதுக்காக , இம்புட்டு ஏற்ற, இறக்கமா....? எதோ மந்திரம் போட்ட மாதிரி ....? ஏன்..சார்..?
கிட்டத்தட்ட முடிஞ்சு போச்சுடாங்கிற அளவுக்கு இறங்கி - அப்போவாவது சந்தோசமா இருக்க விட்டாங்களா....? அதுலேயும் அடகு கடைக்கார சேட்டுங்க, பேங்க் காரங்க எல்லாம் போன் பண்ணி - உங்க நகை எப்போ திருப்புது , வட்டி வரலே எல்லாம் கேட்டு - கேட்டு , இப்போ - கோயி பாத் நஹி ஜி...!  பஹுத் படியாஹை ஜி... அராம்ஸே ஆவோ ஜி.. தான்...! கொஞ்சம் அசந்த நேரத்துக்குள்ளே திரும்ப  U டர்ன் அடிச்சு மேலே போய்ட்டாங்க...!
அதெல்லாம் ஒரு கால்குலேஷனும் இல்லைங்க ஜி...! சும்மா, அப்படியே குத்து மதிப்பா கிளப்பி விடுறது..!
( பசங்க - 2 க்ளைமாக்ஸ்ல அந்த பாப்பா சொன்ன கதை மாதிரி - ஒரு ஊர்ல ஒரு காக்கா இருந்திச்ச்சாம்... அது அங்கே இருந்த பனைமரத்து மேலே ஏறி, பனம்பழம் மேலே உக்கார்ந்த்திச்ச்சாம்,....)
ஆனால் , ரோமன் சொன்ன மாதிரி - எந்த ஒரு விஷயத்தையும் - முழு ஈடுபாட்டோட, மணிக் கணக்கிலே , வருஷக் கணக்கிலே பழகினால், நிச்சயம் நாம அதில் மாஸ்டராகலாம்...!
அவரு - ஜெயிச்ச ஆளு..! பெரிய ஆளு..! அவர் சொன்னால் கரெக்ட்டாத் தானே இருக்கும்...!
நம்ம ரெண்டாவது பதிவு எழுதிய பிறகு - இந்த இடைப்பட்ட இரண்டு மாதத்திலே , வாசக நண்பர் ஒருவர் எனக்கு மெயில் அனுப்பி இருந்தார்...! சார், தங்கம் டூட்டி இறங்கியதற்கும், இந்த விலை இறக்கத்திற்க்கும் சம்பந்தம் உண்டா.. அது எப்படி , நீங்கள் அவ்வளவு சரியாக சொன்னீர்கள்...! அது மட்டும் சொல்லுங்கள்...!
சார், மார்க்கெட் ஸ்டடி செய்து இருந்தால், ஒரு கத்துக்குட்டி கூட சொல்ல முடியும்...! எனக்கு அந்த அளவுக்கு எல்லாம் விவரம் பத்தாது...! எதோ வாய்க்கு வந்தது , எழுதிட்டேன்..... அவ்வளவுதான்னு சொன்னேன்...!
அவரு நம்புன மாதிரியும் தெரியலை...! நம்பாத மாதிரியும் தெரியலை...!
சரி விடுங்க...!
நண்பர் ஒருவர் WHATSAPP ல அனுப்பிச்ச ஒரு மெசேஜ் கீழே கொடுத்து இருக்கிறேன்....!
=======================================================

================================================================
நம்ம இந்த IVS சீரிஸ் கட்டுரைகளே , இப்படித்தான் ஏனோ , தானோன்னு இருக்கும்..!  புரிஞ்ச மாதிரியும் இருக்கும்... புரியாத மாதிரியும் இருக்கும்...!
IVS  - இது என்ன சார்...! புதுசா..? Iniyoru Vidhi Seivom ...! ஹைய்யோ... இது கூட தெரியலை !
சரி, மேலே வாங்க...!
என்ன செய்யனும்னு சொல்லிட்டு  - இன்னும் ஒண்ணுமே சொல்லலையே , சார்..! மேலே சொன்ன பார்முலா வைச்சு எதுவாவது புரியுதான்னு பாருங்க..!
புரியலைன்னா கேளுங்க...! அனேகமா கமெண்ட்ஸ்ல - என்னைவிட தெளிவா, நம்ம நண்பர்கள் விளக்கம் கொடுக்கலாம்..!
கொஞ்சம் ப்ளாஷ் பேக்..! நமது IVS - இரண்டாம் அத்தியாயம்...!
-------------------------------------------------------------------------------------------------------------
சரி, இந்த மாதிரி - புலம்பாம, ஒரு நல்ல முடிவு எடுக்க என்ன செய்யணும் ? சரியான நேரத்தில் , மிகச் சரியாக ஒரு வழி நடத்தல் கிடைக்க என்ன செய்யணும் ...?
வேற என்ன, ஆண்டவன் தான் மனசு வைக்கணும்...! 
சீரியஸா, பேசும்போது - காமெடி பண்ணாதீங்க பாஸ்...!
நானும் ரொம்ப சீரியஸாத் தான் சொல்றேன்....! கடவுள் தான் மனசு வைக்கணும்....!
எப்போவுமே , ஒரு விஷயம் ஒருத்தன் சொல்லும்போது - அவன் தோற்றவனா இருந்தால், அது வெறும் புலம்பல்னு தோணும்... யாரும் காது கொடுத்து கேட்க மாட்டாங்க....! அதுவே அவன் ஜெயித்தவனா இருந்தால்....?    நமக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டங்களான்னு தோணும் இல்லையா...?
---------------------------------------------------------------------------------------------------------------
இப்போ ரோமன் ஒரு IAS , அவரு ஜெயிச்சவர்..!
ஆனால், நான்...? நான் ஜெயிச்சவனா...?
நான் என்னோட பழைய பதிவுகள் சிலவற்றில் கூறி இருக்கிறேன்..! நான் வாழ்ந்து வளர்ந்து வந்த சூழலுக்கு - நான் ஜெயிச்சவன் தான் ..!
அப்படி என்ன அசாதாரண சூழல்...! இப்போ என்ன சாதிச்சிட்டீங்க...?
என்ன சாதிச்சேங்கிறது முக்கியமா? எப்படி சாதிச்ச்சேங்கிறது முக்கியமா.?
எப்படி.. எப்படி...எப்படி  .! 
சொல்றேன்... போகப் போக சொல்றேன்..!
எப்போ? கட்டுரை பெருசாகி இருக்குமே..! இனி வர விருக்கும் கட்டுரைகள்ளேயா ...! மனசாட்சியோட பேசுயா..! அடுத்த கட்டுரை வர இன்னும் அஞ்சாறு , மாசம் ஆகும்..? எவ்வளவு நேரம் ஆனாலும், சொல்லனும்னு நினைச்சா ... சொல்லிட்டே போ...!  என்ன ஆனாலும் சரி...! 
சரி, உங்க இஷ்டம்... மேலே படிங்க...!
=================================================
இது என்னோட அனுபவத்தில ..... நான் கண்டறிந்த விஷயங்கள்..!
வேற என்ன .. ஆண்டவன் தான் மனசு வைக்கனும்னு சொன்னேன் இல்லையா...? அது என்னன்னு பார்ப்போம்...!
நீங்க இந்த ஊர்ல பிறக்கணும், இந்த ஊர்ல வளரணும்னு வர்றது விதி...!
நீங்க அந்த ஊர்ல இருக்கும்போது - நீங்க இருக்கிற ஏரியாவுக்கு , உங்களுக்கு அருகாமையில் - நீங்கள் அடிக்கடி செல்லும் வகையில், உங்களோட இஷ்ட தெய்வம் கண்டிப்பாக இருந்தே தீரும்...! அதைக் கண்டு பிடிக்க நீங்க மெனக்கெட்டுத்தான் ஆக வேண்டும்...! 
உங்களுக்கு சைக்கிள் தான் இருக்குதா...! ஒரு பத்து கிலோ மீட்டர் தூரம்  - பைக் - ஒரு முப்பது கிலோ மீட்டர் ரேடியஸ் .... ! கார் ஒரு நூறு கிலோ மீட்டர் தூரம்..! பக்கத்துல இருக்கிற ஒரு இரண்டு , மூன்று மாவட்டம் கணக்கு வைச்சுக்கோங்களேன்..! உதாரணத்திற்கு - வேலூர் என்றால் - வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை , திருவள்ளூர் இப்படி...!
முதல்ல அந்த கோவில் எங்கே இருக்குதுன்னு பாருங்க...! சுற்றி இருக்கிற கோவில்கள்ளே , குறைஞ்சது ஒரு இருநூறு ,முன்னூறு வருஷம் பழைமையா இருக்கிற கோவிலா இருக்கணும்..! நல்லா, கவனமா பார்த்துக்கொண்டே வரவும்...! வாரம் ஒரு கோவில் வைச்சுக்கோங்களேன்...!
மிகச் சரியாக அந்த கோவிலுக்கு நீங்க வந்தவுடனே, உங்க மனசுக்கு தோணும்....! இதுதான் நாம தேடிக்கிட்டு இருந்த கோவில்...!
கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி - நீங்க வீட்டுக்கு திரும்பி வந்த உடனே , அதே நாளில் கிடைக்கும்..!
 அந்த மாதிரி கோவிலை முதலில் கண்டு பிடியுங்கள்...! அதுதான் உங்களுக்கான சக்தி சுரங்கம்..! இங்கே இருந்துதான் உங்களோட திசை சரி ஆகப் போகுது..! கர்மவினைகளை ஒவ்வொருவரும் அனுபவிச்சே ஆகணும் அதில் மாற்றமில்லை...! ஆனால், அதுக்குள்ளே நம்ம ஜோலியை முடிச்சிடுவாங்க..! ஐயா, பரம்பொருளே... இப்போ படுற கஷ்டம் போதும்... கொஞ்சமாவது பிரேக் விடுங்க...! நான் கஷ்டப்பட்டுக்கிறேன், அதுக்கு முன்னே , என்னை நம்பி வீட்டுல நிறைய ஜீவன்கள் இருக்குது... அவங்களுக்கு கொஞ்சம் ஏதாவது என்னால் முடிஞ்சதை செஞ்சுக்கிடுறேன்..! கொஞ்சம் கட்டை அவிழ்த்துவிடுயான்னு , நீங்க நெஞ்சி கதறும் பாஷை தெரிந்த - உங்களுக்கு நல்லது பண்ணக்கூடிய ஒரே தெய்வம் , அந்த கோவிலில் இருப்பவர்தான்..! 
நீங்கள் நினைத்தால், வாரம் ஒருமுறை சென்று வரக்கூடிய நிலையில் இந்த கோவில் இருக்கும்...! வாரம் ஒருமுறை சென்று வருவதும் அவசியம்... குறைந்த பட்சம் , நீங்கள் மூச்சு விடும் அளவுக்காவது - உங்கள் கவலைகள் குறையும் வரையில் , வாரம் ஒருமுறை சென்று வாருங்கள்...! அதன் பின் நடக்க விருக்கும் அற்புதங்கள்  எல்லாம் உங்கள் நினைவகலாமல் இருக்கும் ..!
==============================================
உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கும்போது -  எந்த ஒரு சூழ்நிலையிலும் , பிற மதங்களை சேர்ந்த , அல்லது பிற தெய்வங்களை நிந்திக்க வேண்டாம்..! சிவன் மட்டும் தான் பிடிக்கும், பெருமாள் எல்லாம் வேண்டாம்னு நீங்கள் நினைச்சாலே, இந்த பரமபதத்தில் - நீங்கள் என்ன தான் நம்பர் போட்டாலும், பாம்பு இறக்கிவிடும்...! அதன்பிறகு, உங்கள் இஷ்டம்..! இஷ்ட தெய்வத்தை நேரிலேயே பார்த்தாலும், பிற தெய்வங்களையும் எத்தனையோ மகான்கள் தொழுதார்களே... அதற்க்கு இதுதான் காரணம்..!
===================================================
எந்த ஒரு மோசமான சூழ்நிலையிலும், அன்னத்தை பழிக்காதீர்கள்...! உங்கள் தட்டில் விழுந்த சாப்பாட்டுக்கு பின்னே - மிகப் பெரிய காலக் கணக்கு இருக்கிறது...! தயவு செய்து வீணாக்காதீர்கள்..! புண்ணியம் எல்லாம் அப்புறம்..! அது நீங்கள் இறைவனுக்கு திருப்பி அளிக்கும் மரியாதை...! அடுத்த கட்டுரையில் அதை இன்னும் கொஞ்சம் விரிவாக தருகிறேன்...!
இப்போது நீங்கள் படும் கஷ்டங்கள் - உங்கள் கர்ம வினையை வெகுவாக குறைத்துக் கொண்டு இருக்கும் , நல்ல விஷயம் என்று மனப் பூர்வமாக நம்புங்கள்..!
=======================================================
வாழ்க்கை - பொத்தல் விழுந்த படகு மாதிரி இருக்குதா...? எந்த காரணம் கொண்டும் காலையில் ஐந்து மணிக்கு மேல்  தூங்கி கொண்டு , உங்களுக்கு கிடைக்க விருக்கும் பிரபஞ்ச சக்தியை - தவறவிடாதீர்கள்...!
அடுத்தவர்கள் மேல் - சுள் சுள்ளென்று எரிந்து விழும் குணம் உங்களுக்கு  இருந்தால், உடனடியே உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்...! இறைவனின் கர்ப்பகிருகத்தில் வெறும் தீப வெளிச்சத்தில்  - அவருக்கு முன் நீங்கள் அமர்ந்து இருக்கும்போது - மனம் என்ன அமைதியில் இருக்குமோ - அந்த அமைதி -  நிதானம் உங்களுக்கு அவசியம்...! நேரமும், எனர்ஜியும் ரொம்ப முக்கியம்...!
==========================================================
மொத்தத்தில் சுருக்கமா சொல்லனும்னா, கடந்து போன நாட்கள் எப்படி வேணும்னாலும் போகட்டும்...! முடிஞ்சு போனதைப் பற்றி யோசிக்க முடியாது...! இதுக்கு மேலே, உடனடியா நீங்க முதலில் நல்லவனா மாறணும், உண்மையிலேயே  நல்லவனா.... ! கூட இருக்கிறவங்க கிட்ட வேஷம் போட்டுடலாம்...! ஆனா, ஆண்டவன் கிட்ட .... எந்த பாச்சாவும் பலிக்காது..!
நம்மோட மனசு எந்த அளவுக்கு சுத்தமோ - அந்த அளவுக்கு அவரின் அணுக்கம் கிடைக்கும்...! 
காலையில் குறைந்தது - ஒரு ஐந்து நிமிடம் - மனசுக்குள் இறைவனை தரிசனம் செய்யுங்கள்... உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை அவரிடம் சொல்லுங்கள்...! உங்கள் தந்தை - இந்த பிரபஞ்சத்தின் மாபெரும் சக்தி !
அது ஞானமோ , செல்வமோ - இரண்டு பொக்கிஷங்களும் குவிந்து கிடக்கின்றன அவரிடத்தில்...! உங்கள் தேவை நிச்சயம் நிறைவேறும்...!
==========================================================
சரி.... இன்னும் என்னென்ன செய்யனும்...?  
இன்னைக்கு இது போதும்.... ! இன்னும் சில முக்கிய விஷயங்களை இனி வரவிருக்கும் பதிவுகளில் பார்ப்போம்ம்ம் ....!
என்னுடைய தனிப்பட்ட அனுபவங்கள் , முயற்சிகள் , படித்து அல்லது  உங்களை மாதிரி  சில நல்ல மனுஷங்க சொல்லிக் கொடுத்த விஷயங்கள் பற்றி - பகிர்ந்துகொள்ளப்போவதுதான்... இந்த IVS கட்டுரைத் தொடர்கள்..!
சரி, அப்பப்போ... நான் எல்லாம் ரொம்ப அடிமட்டத்தில் இருந்து முன்னுக்கு வந்தவன் அப்படின்னு அடிக்கடி சொல்றேனே...! என்ன, கடல் மட்டத்துக்கு ஒரு ஆயிரம் அடி கீழே இருக்குமானு நீங்களே கூட எப்போதாவது யோசிச்சு இருப்பீங்க...! இல்லை.?
ஒரு BMW - X 7 இல்லேன்னா BENZ GL 63 AMG , இந்த மாதிரி ஒரு கார் வாங்கணும்னா , அந்த இறைவனின் கருணையால் அது கூடிய விரைவில் சாத்தியம்..! சரி, கொஞ்ச நாள் போகட்டும் - கொஞ்சம் விவசாய நிலம் எல்லாம் வாங்கி - அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு அடக்கி வாசிக்கிறேன்..! அது ஒரு பந்தா, பெருமை அப்படியெல்லாம் இல்லை...! என் பசங்க, என்னைப் பார்த்து அது எங்க அப்பான்னு - ஒரு சந்தோசமா , கம்பீரமா சொல்லுவாங்க பாருங்க...! அதுக்குத்தான் ! நான் இன்னைக்கு எங்க அப்பாவை அம்மாவை நினைச்சு-  எத்தனை ஜென்ம தவம் பலிச்ச வரம்னு - ஒரு பெருமையில் மனசு பூரிக்கிறேனே... அது மாதிரி....! 
ஒன்னும் இல்லை - போன மாசம் ஒரு கிரிக்கெட் மேட்ச்..! என் பையனும் கூட வந்து இருந்தான் ..! நான் பேட்டிங் பண்றப்போ - 'மைக்'ல "அப்பா, சிக்ஸ் அடி..".ன்னு கத்துனான்..! அடுத்த பந்தே மாட்டுச்சு...  லெக் சைட் தூக்கி அடிச்சது - சிக்ஸ் லைனுக்கு கொஞ்சம் முன்னே விழுந்தது... ! பையனைப் பார்த்து - எதோ செஞ்சுரி அடிச்ச ரேஞ்சுக்கு - BAT UP பண்ணினேன்...! அவனுக்கு செம ஹாப்பி...! "தேங்க்ஸ்...ப்பா..".ன்னு திரும்ப மைக்ல ..! பக்கத்துல இருந்த நண்பர் - "சார், பையன் கேட்டாத் தான் , அடிப்பீங்களா."..ன்னு மைக்ல திரும்ப கமெண்ட்...!
அதானே, பசங்க கேட்டாத்தான் எதுவும் செய்யனுமா...? AMG GL 63 மாதிரி ஒரு நல்ல காரோ, இல்லை கீழே படத்துல கொடுத்த மாதிரி ஒரு பங்களாவோ - இல்லை பார்ம் ஹவுஸ் வாங்கினோம்னா, அது நல்லா இருக்காதா...?  அது வாங்குறோம் .. இல்லை ! முதல்ல இந்த மாதிரி வாங்கலாம்னு யோசிக்கிறதே, ஒரு பெரிய சாதிச்ச திருப்திதான்..... ஏன்...இந்த மாதிரி சொல்றேன்...?
தொடர்ந்து மேலே போறதுக்கு முன்னே -  கொஞ்சம் அந்த கடல் மட்டத்துக்கு கீழே எவ்வளவு ஆழம்னு தெரிஞ்சுக்கிட்டா.... இறைவன் எந்த அளவுக்கு அனுக்கிரகம் பண்ணி இருக்கிறார்னு நீங்களும் தெரிஞ்சுக்கலாம்...!
இது கிடைச்சதை தவற விட்டுட்டு - தோற்றுப்போன ஒரு மனிதனின் புலம்பல் அல்ல..! கொஞ்சம் கொஞ்சமா, நிதானமா ஜெயிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு மனுஷனோட வெற்றி மந்திரம்னு - புரிய வரும்..!
“If you are searching for a person,

who will change your life ..........

Look in the mirror ..................”

- Rabindranath Tagore
நாம் ஜெயிக்கும் பயணத்தில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நிறைய முட்டுக் கட்டைகள் வரும்... கூட இருக்கிறவங்களே உதவி பண்ணாம, நாம் கீழே விழுந்துட மாட்டோமா , கைகொட்டி சிரிக்கலாமேன்னு தான் பார்ப்பாங்க...! கடைசி வரைக்கும் காலை வாரி விட முயற்சி செஞ்சுக்கிட்டே இருப்பாங்க...! இதெல்லாம் அவங்களை விடக் கொஞ்சமா மேலே போறவரைக்கும் தான்...! இன்னும் அதிகமா உயரம் போகணும்...! ஒரு லெவெலுக்கு மேலே, அவங்க கிட்ட வர முடியாது....! 'சீ... இந்த பழம் புளிக்கும்' னு போய்டுவாங்க...!
ஓ ... சாரை எனக்கு நல்லாத் தெரியுமே... ரொம்ப நாள் பழக்கம்...! அப்படி மாறிடும்..! 20 ரன் , 30 ரன் எல்லாம் யாரும் மதிக்கவே மாட்டாங்க..! ஐயா, 1 ரன்ல கூட அவுட் ஆகு, பரவா இல்லை. ஆனா, விளையாடவே மாட்டேன்னு - வேடிக்கை பார்த்துக்கிட்டே இருந்தே, இது நியாயமா பாஸூ ..!
உங்களை நம்புங்க......கடவுளை நம்புங்க...! உச்சம் தொட்டு விடும் தூரம்தான்..!

இந்த மாதிரி , க்யூட்டா ஒரு Farm ஹவுஸ் - அது உங்களோடதா இருந்தா, எப்படி இருக்கும்? அட, ஆசைப் படுறதுல என்ன தப்பு..? பட்டுப் பாருங்களேன்... தினம் ஒரு முறை அதற்க்கு என்ன பண்ணலாம்னு - உங்க ஆழ்மனசை - கொஞ்சம் கேட்டுப் பாருங்க..!
அனேகமா இன்னொரு ஐந்தாறு வருடங்களில் - உங்களுக்கு அதற்க்கு நல்ல வழிகள் கிடைக்கும்.....! 
கொஞ்சம் கீழே உள்ள லிங்கை  க்ளிக் பண்ணி படிங்க...! சில காரணங்களுக்காக , அந்த வாசகர்கள் தெரிந்து கொள்ளவும் - மேலும் அங்கே இருக்கிற ஒரு கட்டுரைக்கு கண்டினியூயிட்டி தேவை என்பதால் - அங்கே பகிரப்படுகிறது...!
பிரியமுடன்,
ரிஷி 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

கதறல்கள் - 1

Days are passing by listening your epmty promises. Do you believe in Annamalaiyar? Waiting for my hard earned money at the age of 70. -- ...