Friday 16 February 2018

குபேர பகவானை நேரில் பார்த்த உண்மை சம்பவம்----- திருவண்ணாமலை பேரதிசயம்


எது இறைவன்? எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்குகிறது? எந்த சக்தி - இந்த பூமியை , ஒரு குறிப்பிட அச்சில்,
ஒரு குறிப்பிட்ட வேகத்தில், ஒரு குறிப்பிட்ட சாய்வான கோணத்தில் இயக்குகிறது? அந்தரத்தில் மிதக்கும் பூமி, தானும் சுற்றி , சூரியனையும் சுற்றி - ஒரு சரியான விசையில் இயங்க , எது காரணமாகிறது? அந்த சக்திக்கு பெயர் தான் கடவுளாகடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா

நம் இந்து மதம் சொல்வது போல ... இத்தனை கடவுள்கள் நிஜமாகவே உள்ளனரா ? சிவன் , பார்வதி, அவரின் அண்ணன் திருமால் , லட்சுமி, முருகன், கடவுள், நவகிரகங்கள்... சப்த கன்னிகள், இந்திரன், யமன் என்று எத்தனை தேவர்கள்... ஹம்ம்மா.. நிஜமாகவே இத்தனை பேர்கள் உள்ளனரா ? இத்தனை தெய்வங்களாஅவர்களை தொழுது இறை நிலை அடைந்த சித்தர்கள் ...?
நமது இந்து மதமும் , புராணங்களும், வேதங்களும் சொல்லும் அனைத்தும் உண்மையா ?

சரி, இவை அனைத்தும் உண்மை இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். யாரை முட்டாளாக்க இத்தனை கோவில்கள்.. இத்தனை சிலைகள், அபிசேக , ஆராதனைஎதற்கு ஜாதகம், மந்திரம், நேரம் , காலம் என்று இத்தனை கோட்பாடுகள், குழப்பங்கள்.. ?  

நல்லவர்களுக்கு தெய்வம் துணை நிற்கும். தீயவர்களை துவம்சம் செய்யும் என்பது எல்லாம் வெறும் புராணக்கதை களில் மட்டும்தானா
நடைமுறையில்..? சாராயம் காய்ச்சி  விற்றவர்கள், கள்ள நோட்டு அடித்தவர்கள் , கள்ளக் கடத்தல் செய்தவர்கள் தான், இன்றைக்கு கல்வித் தந்தைகள்.... மாண்புமிகுக்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம். கட்டப் பஞ்சாயத்துதான் ஒரே நீதி முறை. லஞ்சம் ஒன்று தான் தேசிய மொழி. தனி மனிதன்... என்ன செய்வது என்றே தெரியாமல் இயங்குகிறான்.  வாரத்திற்கு ஆறு நாட்கள், நாளைக்கு 12 மணிநேரம் ஆபீஸ் வேலை... குழந்தைகள் என்ன சாப்பிட்டார்கள், என்ன படிக்கிறார்கள்.. ? ஒன்னும் கவனம் செலுத்த முடிவதில்லை. இதில், மனைவியும், வேலைக்கு செல்ல வேண்டிய சூழல். கூட்டு குடும்ப வாழ்க்கை , எப்போதோ சிதைந்து விட்டது ?

இப்போதைக்கு - பசங்க பெரிய ஆளா ஆகணும் .. நல்ல படிக்க வைக்கணும்...! கடனை அடைக்கணும்.. கந்து வட்டி அடையணும். கடன் இல்லாம கொஞ்ச நாளாவது , வாழ்க்கையை என்ஜாய் பண்ணனும். முடிஞ்சா ஒரு நல்ல வீடு, ஒரு நல்ல கார். ... அந்த சக்தி இல்லையா ...  புள்ளையை நல்லா படிக்க வை. அவன் நல்ல வீடு , வாங்குவான்.. நல்ல கார் வாங்குவான்..  இம்புட்டுக்குள்ளே  தான் வாழ்க்கை. நம்ம புள்ளைய நல்லா வைச்சு இருந்தா , வயசான பிறகு நம்மளை மதிக்கும்.  இல்லை, முதியோர் இல்லம், பரதேசி வாழ்க்கை தான்.

இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம். தமிழ் நாட்டிலே சின்ன சின்ன ஊர்கள் லே கூட ... upper middle class family கள்ல , வளர்ற குழந்தைகளுக்கு  - தமிழ் படிக்கவே தெரிவது இல்லை. .. ரொம்ப சாதாரணமா சொல்றாங்க . CBSE சிலபஸ் சார். .  (ஹிந்தி படிக்க தெரியுது.. பிரெஞ்சு எல்லாம் கத்துக்கிறாங்க.) பாவம் குழந்தைங்க.. ஹிந்தி படிக்குது ... சுத்தமா மீனிங் தெரிவது இல்லை.. நிஜமா எங்கே போகுது  தமிழ் நாடு..நூத்தி பதினஞ்சு னு நம்பர் சொன்னா கூட.. தெரியலை. "அங்க்கிள், இங்கிலிஷ்லே நம்பரை சொல்லுங்க" னு கொஞ்சுதுங்க.. 

இதிலே, தினமும் குழந்தைகளை விஷ்ணு சகஸ்ரநாமமும், புருஷ சூக்தமும் படிக்க சொன்னா... சான்ஸ் இருக்குனு நெனைக்கிறீங்க..
எப்படி பல தலைமுறைகளுக்கு முன்னே சமஸ்கிருதம் நமக்கு புரியலை வேண்டாம்னு சொன்னோமோ..அதே மாதிரி.. தமிழுக்கே இந்த நிலைமை இன்னைக்கு. .. 

இலக்கியமா..கொஞ்ச நாள் கழிச்சு சுஜாதா நாவல்கள் கூட படிக்கத் தெரியாத ஒரு தலைமுறை வரப்போகுது... எதுக்கு சொல்ல வர்றேன்னா.. ஒட்டு மொத்த சமுதாயமே ... ஒரு சில விஷயங்களை தூக்கி கடாசிட்டு , தேவை இல்லைன்னு நெனைக்கிற விஷயங்களை புறக்கணிச்சுட்டு -- எதையோ நோக்கி வேகமா ஓடிக்கிட்டு இருக்கு..! 

இருக்கிற பொல்லுஷன், டிராபிக் ஜாம், வியர்வை பொங்க, கூட்டத்திலே பிதுங்க பிதுங்க..  ஒரு பஸ் பயணம், ஆபீஸ் பிரஷர், வீட்டு பிரஷர் ... இது தான் சார் வாழ்க்கை..    

இதில் கடவுள் பற்றிய சிந்தனையாவது..? வழிபாடாவது..நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு ... அதை மதிக்கிறேன்.. அவ்வளவுதான் என்னாலே செய்ய முடியும். சக்கரம் போலே போய்கிட்டு இருக்கு சார்.. வாழ்க்கை..

(கடவுள் இல்லைன்னு சொல்லலை.. இருந்தா நல்லா இருக்கும் னு சொல்றேன்.. தசாவதாரம் படத்திலே கோவிந்த் கமல் கிளைமாக்ஸ்லே சொல்வாரே..! )

நான் நல்லவன்னா.. கடவுள் என்னைக் கஷ்டத்திலே காப்பாத்துவார்... ஆளை விடுங்க.. ...  இப்படித்தான்  10 க்கு  9 பேர். மீதி இருக்கிற ஒருத்தர் --- நம்பவா ? வேண்டாமா? ரகம்.

கடவுள், சாமி னு பேசுறப்போ, ஒரு சந்தோசம்  வருது. ஆச்சரியம் வருது. கடவுள் கிருபை, கடவுள் கிருபைன்னு சொல்லிக்கிட்டே யாராவது தெரிஞ்சவங்க பேசுறப்போ... அவன் பொய் சொல்றான்னு தெரிஞ்சும்... நாமளும் , கடவுளை கும்பிட்டுப் பார்ப்போம் னு வர்ற ரகம். 

போன மாசம் , சதுரகிரி போய்ட்டு வந்தேன்.. அண்ணாமலை போய்ட்டு  வந்தேன்.. அடேங்கப்பா.. என்னா தரிசனம்என்னா கூட்டம்.. ? மலையை பார்க்கிறப்போ .. கண்ணிலே தண்ணி கட்டிக்கிடுச்சு... சிலிர்த்துப் போய்ட்டேன்.. ... அடுத்த தடவையும் போகணும்.. முடிஞ்சா நீயும் வா... ... 

எதுக்கு இத்தனை ... பந்தா? பில்ட் அப் வர்ற கும்பல்லே --- முக்கால்வாசிப் பேர் எதுக்கு வர்றாங்கன்னே தெரியலை..? பொண்ணுங்களைப் பார்க்க வர்ற கூட்டம்... அப்படிப் போடு போடுன்னு மொபைல்லே சத்தமா பாட்டு வைச்சுக்கிட்டு ... சினிமா , சீரியல் கதை , பக்கத்து வீட்டு கதை... கிரிக்கெட் ... இதெல்லாம் பேசுறதுக்கு உங்களுக்கு மகாலிங்க மலையும் , கிரிவல பாதையும்  தானா கெடைச்சது..இப்படி எல்லாம் பண்றதை விட - வீட்டுலே , நிம்மதியா இருக்கிறது , குழந்தை, குட்டிகூட டைம் செலவழிக்கிறது எவ்வளவோ நல்லது.. ... 

ஆகக் கூடி - வர்ற கும்பல்லே, நிஜமாவே நடந்து போகும் பாதை - கர்ப்ப கிருகத்துக்கு சமம் என்று எண்ணி , உண்மையான பய பக்தியுடன் சுற்றி வருபவர்கள் ... 1000 க்கு 10 பேர் தான் இருப்பாங்க.
====================================================================

கடவுளை நேர்ல பார்த்தாதான் நம்புவோம் னு சொன்னா தப்பே இல்லை. அந்த மாதிரி பார்த்தவங்க தான் , கடவுளை பார்த்த சித்தர்களை பார்த்தவங்க தான் -- இன்னைக்கு சதுரகிரி , அண்ணாமலை மாதிரி இடங்கள்லே இருக்கிற ரிஷிகள்முனிவர்கள். வழியிலே பிச்சை எடுக்கிற சாதாரண சாமியார்களை சொல்லலை.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK3lyT07JGA8LaJAFfreWTmB6VIA-DkMvukf1yXHuIb0mtN3Spm3_7D-y5fyrFVapYYRDP-HLShsgfCas1XDeL6W34W_PO3g2e4nM4MrUkaJo0_M5GMz3CeISaxpNhHl8uREzzAKDHz3Nm/s320/1.jpg
இவர்தான் பொடி சாமீ.இவர் அண்ணாமலையில் இருக்கிறார்.பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் கிரிவலப்பாதையில்  இவர் தனது பக்தர்களோடு இருந்தார்.அப்போது ஒரு மனிதன்  செல்வதை பார்த்து ,"அதோ குபேரன் கிரிவலம் போகிறான். போங்க எல்லாரும  ஆசிர்வாதம் வாங்குங்க " என அடையாளம்  காட்டினார். . இவரது பார்வை நமது பாவங்களை அழிக்கும்.

( குபேரன் அண்ணாமலை கிரிவலம் வருவது பற்றி , நமது முந்தைய பதிவுகளில் தேடிக்கொள்ளுங்கள்.. )

அப்படி அவர் குபேரனை அடையாளம் காட்ட , அருகில் இருந்த ஒரு சாதாரண பக்தர் , (ஹோட்டலில் இலை எடுத்துப் போட்டு , டேபிள் துடைப்பவர் ) குபேரன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க, இன்று அந்த மனிதர் - திருவண்ணாமலையிலும், அருகில் இருக்கும் சில பெரிய ஊர்களிலும் - பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு அதிபதி.  இந்த மனிதரிடம், கடவுள் இல்லை சார். எல்லாம் பெரிய புரூடா னு சொன்னா.. நம்புவாரா..?  ( பட்டணத்து தம்பி, போங்க. போங்க.. உங்க வேலையை பாருங்க.. னு சிரிச்சுக்கிட்டே சொல்றார். அந்த இந்நாள் திருவண்ணாமலை   VIP ..... )

முழு நம்பிக்கை யுடன் கூடிய பக்தி - உங்களை கடவுளுக்கு வெகு அருகில் அழைத்து செல்லும். என்பதற்கு ஒரு அற்புதமான உதாரணம் ...

வராஹி அம்மனை நேரில் தரிசனம் செய்யும் ஒரு நண்பரை எனக்கு ரொம்ப நாட்களாகத் தெரியும். குழப்பமான  / தீர்க்க முடியாத சில பிரச்னைகளுக்கு, அவருடன் பேசி , தீர்வு வாங்கி --- வராஹி அருளால் , நிம்மதி அடைந்து இருக்கிறேன்..

அருணகிரி நாதருக்கும், ராமலிங்க அடிகளுக்கும்பரஞ்சோதி ( சிறு தொண்டருக்கும் ) , ராமகிருஷ்ணருக்கும் கடவுள் தரிசனம் கிடைத்ததே..  அவர்கள் ஒன்றும் கற்கால மனிதர்கள் இல்லையே...


அதனாலே, கடவுள் இருக்கிறார் .... எல்லாம் நம்ம கையிலேதான் , நம்ம நம்பிக்கிலே தான் இருக்கு...... கஷ்டப்படுறப்போ, எங்கிருந்தோ .. உதவிக் கரம் நீளுதே.. அது கடவுள் தான் சார்... நமக்கு தான் தெரிய மாட்டேங்குது..
ரொம்ப சீக்கிரம்.... உங்களுக்கு ஒரு நல்ல தெய்வ அனுபவம் கிடைக்கும்,, உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தால்...



வெறுமனே என்ஜாய் பண்றது மட்டும் வாழ்க்கை இல்லை சார்.  கண்ணதாசனை விடவா, பட்டினத்தாரை விடவா.. செல்வத்தில் போகங்களில் , நீங்க மூழ்கி இருந்திடப் போறீங்க... அவங்களே ... உதறி தள்ளலே .... .


மூன்று தினங்களுக்கு  முன், ஒரு அன்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சலில் கிடைத்த போட்டோ. அருணாச்சலம் தான்..  பர்ட்டிக்குலரா , மலையில் ஒரு இடத்தில் --- வெள்ளையாக ஒரு புள்ளி தெரிவதைப் பாருங்கள்.. ... ஏன் ? எதற்கு இப்படி என்ற காரணம் தெரியவில்லை நேரில் பார்த்தவருக்கு  மெய் சிலிர்க்குமா .. சிலிர்க்காதா..சதுரகிரி மலையிலும் , நட்சத்திரங்கள் அமாவாசை நள்ளிரவை ஒட்டி , திடீர் திடீரென்று மலையில் விழுவதை படம் பிடித்து உள்ளனர்..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSncT1ozOXMsH5RQvRKhh-3Uats4eGcb9-F03B3-e19W6jZD2uioFewuJ0hxTQOygkO9QmmpoorcY3Tv1kI4hbFlSm0ruUUNK0SX_15EuG6NXLw7QZL2IBHVcZw6BhrQWbxncYiC_9DA60/s640/arunachala+1.jpg

இவை எல்லாம், மக்களை முட்டாளாக்க மட்டுமே .. என்று சொல்ல முடியாது.. நம்ப முடியாத  ஒரு அதிசயம்.. ... நம்புபவர்களுக்கு  இறைவன் இருப்பது உண்மை... நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, வெறும் காமிரா ட்ரிக்.

மகாலிங்கம் செல்லும்போது - ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள் பாலிக்கும் பத்ரகாளி அம்மனையும் தரிசித்து , அவள் அருள் பெறுங்கள்... உங்கள் வாழ்வில் கண்டிப்பாக ஒரு நீண்ட நாள் வேதனை , உடனடியாக தீரும்..

அருகிலேயே  மடவார் வளாகம் என்னும் கோவில் உள்ளது. (வைத்திய நாத சுவாமி ஆலயம்.) ஸ்ரீ சக்கரம் அடியிலும், பிரகாரத்தில் லிங்கோத்பவருக்கு  அருகிலும், துர்க்கை அம்மனுக்கு எதிரேயும்... ஓரிரு நிமிடங்கள் நின்று பாருங்கள்... சக்தி அலையை பரி பூரணமாக உணர முடியும்... ( Literally , you can feel the vibration )

சதுரகிரி போகும்போது .... அண்ணாமலை போகும்போது ---  , ஸ்ரீ ருத்ரம் -- வாசிங்க..... கர்வம் தலைக்கு ஏறாம , வாசிங்க... எப்படி படிக்குறதுன்னு சிரமம் பார்க்காம கத்துக்கோங்க...மிகப் பெரிய புண்ணியம்.. மிகப் பெரிய ஆத்ம பலம்.   உங்கள் சந்ததிக்கே , ஒரு நல்ல வழி காட்டும்.... வரவிருக்கும் பிரச்னைகள்  .. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போவது போல் ஓடிவிடும்..

வாழ்க வளமுடன்!



09/04/2012 16:25

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.