Friday 16 February 2018

extra .com னு பேர் வைச்சுக்கிட்டு, உருப்படாத வெத்து சமாச்சாரங்களா போட்டுக் கிட்டு இருக்க முடியாது... உள்ளே வந்து படிக்கிற வாசகர்களை ஒரே ஒரு நிமிஷமாவது நிமிர்ந்து பார்க்க வைக்கணும்...

எனது நண்பர் ஒருவரை சென்ற வாரத்தில் சந்திக்க வாய்ப்பு கிட்டியது.  இருவருக்கும் ஒரு பதினெட்டு வருட நட்பு.

சென்னையில் படிக்கும் காலத்தில் தொடங்கிய நட்பு.... வேலைக்காக ஆளுக்கொரு மூலையில்  பிரிந்தாலும், திடீர் என்று போன் வரும்.. பேசுவோம் ..சந்திப்போம்....  அந்த ஒரு சந்திப்பே ஒரு வருடம் போதும்போல தெரியும்.  இருவர் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் போன் உண்டு.. இல்லையேல் அதன் பிறகு ஆறு மாதமோ, ஒரு வருடமோ...
ஆனால், வெகு ஆழமான நட்பு என்பதால் ... எடுத்ததுமே டாப் கியரில் தான் ஆரம்பிக்கும்.... பேச ஆரம்பிக்கும்போதே , ரொம்ப ஆர்வமா , எந்த வித ஈகோவும் இல்லாமல் , கண்களில் பொங்கும் மகிழ்ச்சியுடன் - உங்க கண்ணைப் பார்த்து நீங்கள் பேசுவதை ஆர்வமுடன் கேட்க ஒரு ஜீவன் இருந்தால் , கண்டிப்பாக அங்கு உற்சாகம் கரை புரளும். நட்பும்  பலப்படும் தான்.

இடையில் இவ்வளவு நாள் பேசாமல் இருந்தோமே என்ற உணர்வு கூட வருவது இல்லை.அனேகமாக நம் வாசகர்களுக்கும்  இதைப் போன்ற நட்பு இருக்க கூடும். 

சரி, எதுக்கு இவ்ளோ பெரிய பில்ட் அப் ... என்ன சொல்ல வர்றீங்கன்னு கேட்குறீங்களா?

அவர் கூட பேசிக்கிட்டு இருந்தப்போ - எனக்கு தோன்றிய ஒரு சில முக்கியமான விஷயங்கள் , நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற எண்ணம்தான்...  அப்படியே சொன்னா நல்லா இருக்காது. சாராம்சம் மட்டும்...

==============================================
நம் வாசகர்களுக்காக ஒரு கட்டுரை எழுத தொடங்கி இருந்தேன்.. இப்படித்தான் ஆரம்பம்.......... 
வறுமையினால் துன்பப்படும் குழந்தைகளுக்கு உணவளிப்பது, பசு மாட்டைத் தினமும் பூஜித்தல், வேதம் அறிந்த பெரியோர்களின் ஆசியைப் பெறுதல், சிதிலம் அடைந்த கோவில்களின் புனர்நிர்மாணத்திற்கு உதவுதல், அனாதை பிரேத சம்ஸ்காரம், ஈமச் சடங்குகள் செய்ய வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் பொருள், பணம் உதவி செய்தல் கவனிப்பாரின்றி உள்ள கோவிலில் தீபம் ஏற்றி வைப்பது  -  போன்ற மகத்தான புண்ணிய காரியங்கள் ஜாதகத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாகும்..........

சரி இதே ரீதியில் நிறைய எழுதியாச்சு.... கொஞ்சம் பேர் சின்சியரா பாலோ பண்ணி இருக்கலாம்... நிறைய பேர் பண்ணலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கலாம்....

extra .com னு பேர் வைச்சுக்கிட்டு, உருப்படாத வெத்து சமாச்சாரங்களா போட்டுக் கிட்டு இருக்க முடியாது... உள்ளே வந்து படிக்கிற வாசகர்களை ஒரே ஒரு நிமிஷமாவது நிமிர்ந்து பார்க்க வைக்கணும்... நாம என்ன சைட் இப்போ பார்க்கிறோம்னு? அப்படின்னு தோணுச்சு... 

சரி எப்படி? ஐயா தெரிஞ்சோ தெரியாமலோ மனுஷனா பொறந்தாச்சு....  நாம யாரு, இன்னைக்கு அப்பாவா இருக்கலாம், அண்ணனா இருக்கலாம், நல்ல கணவனா / மனைவியா இல்லை தலைவனா /  குடும்ப தலைவியா இருக்கலாம், இல்லை இன்னும் கல்யாணம் ஆகாம ஒரு நல்ல உள்ளத்துக்கு காதலனாகவோ / காதலியாகவோ இருக்கலாம்.. ஏன் ரெண்டும் இல்லாம ஒரு பொறுப்புள்ள புள்ளையா நம்ம அப்பா / அம்மாவுக்கு இருக்கலாம்...

சரி, இருக்கிறோம்... இப்படி இருக்கிறப்போ நம்மை சுற்றி இருக்கிற எல்லோருக்குமே ஒரு எதிர்பார்ப்பு , கணிப்பு இருக்கும்.. அவரா.. அவர் இப்படி, அப்படி.. நல்லவர், வல்லவர்...இந்த மாதிரி, அந்த மாதிரி...
இந்த எதிர் பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்ற முடிஞ்சாலும், நாம பெரிய பிஸ்தாதான்.

ஆனா, ஒன்னு முடிஞ்சதா அடுத்த கடமை. அதுக்கு அடுத்து இன்னொன்னு... இப்படியே .... போராட்டம் தொடருது..... எல்லாத்துக்கும் அடிப்படையா மூணு விஷயங்கள் தான். வீரம் / தைரியம், கல்வி, செல்வம்...... மூணுல ஒன்னு குறைஞ்சாலும் எங்கேயோ பலமா அடி விழப்போகுதுன்னு அர்த்தம்....

இதோடா, சார் சரஸ்வதி சபதம் பட ரீமேக்குல இறங்கிட்டாருன்னு சொல்லப் போறீங்க.. அதானே... இல்லீங்கண்ணா... யோசிங்க... அது தான்  நிஜம். இந்த மூணுல எதோ ஒரு விஷயத்துல உங்க தனித்தன்மை மேலோங்கி இருக்கும்.. அதை கெட்டியாப் பிடிங்க..... அம்புட்டுத்தான் விஷயம்....

நல்ல உடல் நலம், பலம், ஓரளவு விஷய ஞானம் , நிறைய செல்வம் - இது தான் இப்போதைக்கு நம் சக மனிதர்களின் வாழ்க்கை தாரக மந்திரம். எல்லோருமே இதை நோக்கித் தான் ஓடிக்கிட்டு இருக்கிறோம். 

அண்ணா... எல்லாத்திலும் நான் ஆவரேஜ் தான் , எனக்கே தெரியிது.. நான் என்ன பண்ணனும்? அதைத் தான் இங்கே பார்க்கப் போறோம்..!

(1)...  ஒரு நாளைக்கு பத்து நிமிஷம் வேகமா ஓடுங்க .. எந்த வியாதியும் கிட்டவே நெருங்காது. இப்போ பேசிக்கிட்டு இருந்ததா சொன்னேனே நண்பர் - அவர் காலேஜ்ல படிக்கிறப்போ , ஒரு நாள் அவருக்கு கடுமையான குளிர் காய்ச்சல். டைபாய்டு சீசன். பாவம் அவரால உடம்புக்கு  ரொம்ப முடியலை. கஷ்டப்படற குடும்பம். ஆஸ்பத்திரிக்கு போய் அங்கே ஒரு இருநூறு ரூபாய் கொடுக்கணுமான்னு மனசுக்குள்ளே ஒரு கேள்வி. அன்னைக்கு நைட் தூங்கி , காலைலே எழுந்ததும் , ஒரு பதினஞ்சு நிமிஷம் வேகமா கிரவுண்ட்ல ஓட ஆரம்பிச்சார். ரெண்டே நாள்.... காய்ச்சல் ஓடியே போச்சு.... அன்னைக்கு தொடங்கிய ஓட்டம் காலேஜ் முடியிற வரைக்கும் தினமும் , தவறாம ஓடினார் எனக்கு தெரிஞ்சு....

இன்னும் ஓடுறாராம்... மழையாவது , பனியாவது... உள்ளூராவது - வெளியூராவது... சூரிய வெளிச்சம் வந்துட்டாலே போதும்.. நல்ல வேகமா - பதினஞ்சு நிமிஷம் ஓட்டம். இப்படி ஓடுறதால, ரத்தம் புத்துணர்ச்சி பெறுவதுடன், நோய் எதிர்க்கும் சக்தி - அபரிமிதமாக வளருகிறது ...
செலவே இல்லாமல் , நம் உடல் நலம் பெறும்  . நம்ம உடல் நலம் மேல் அக்கறை இருக்கிறப்போ, சிகரெட், தண்ணி பக்கம் போக மனசு கேட்காது. செலவு மிச்சம். அதனாலே உடலோடு சேர்ந்து மனசு ஆரோக்கியம் கூட ...

ஒரு சின்ன விஷயத்தை தொடங்குறதுல எவ்வளவு நல்ல பலன்கள் பாருங்க....

===================================

(2) அடுத்து கல்வி ஞானம். நம்மோட வசதி வாய்ப்பு பொறுத்து - நமக்கு கிடைச்ச பள்ளி கல்வி , கல்லூரி கல்வி மட்டும் விஷயம் இல்லை. ஒவ்வொரு நாளும் ஏதாவது விஷயத்தை கற்றுக்கொள்கிற ஆர்வம் வர வேண்டும். எதுவும் இல்லையா, ஒரு நல்ல செய்தித்தாள் அரை மணி நேரம் படித்தாலும் போதும்..... கண்டிப்பாக நம் தமிழுடன் ஆங்கிலமோ / ஹிந்தியோ அல்லது இரண்டுமே கற்றுக்கொள்வது மிக மிக அவசியம். 
இரண்டாவது விஷயமான கல்வி ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து விடும். அட போதுமா.. மெயின் விஷயத்துக்கு வருவோம்... செல்வம்...!?

(3) அதிகமா சம்பாதிக்கணும்....! எப்படி? உலகமே இன்னைக்கு அதுக்குப் பின்னாலே தான் இருக்கு. ஏராளமான ஸெல்ப் டெவலப்மென்ட் புத்தகங்கள் எல்லாம் , உங்களை சம்பாதிக்கிறதுல 'புலி' யாக்குறதுக்குத்தான். இந்த மாதிரி புத்தகம் போட்டு அவங்க சம்பாதிக்கிறாங்க என்பது வேறு விஷயம். பெரிய பெரிய மட அதிபதிகளும் இந்த விஷயத்தில் பெரிய ஆளாத் தான் இருகிறாங்க. பெரிய பெரிய அறிவு ஜீவி கூட்டமே இன்னைக்கு சம்பாதிக்கிற வழியை கண்டு பிடிக்கிறதுலதான் தீவிரமா இருக்கு....

இதுல என் மூளை எந்த மூலைக்கு? இருந்தாலும் எதோ ஒன்னு ரெண்டு ஐடியா எனக்கு பட்டதை சொல்றேன்... எல்லாம் அந்த நண்பர் உபயம். அவர் தன்னோட வாழ்க்கையில செஞ்சு கிட்டு இருக்கிற விஷயம். நாமளும் தெரிஞ்சுக்கிடலாம். சரியா இருந்தா, எடுத்துக்கோங்க...

No : 1  வாய்ப்பு கிடைக்கிறப்போ எல்லாம் தங்கம் வாங்குறது. அரை கிராம், ஒரு கிராம், ரெண்டு கிராம்.... தயக்கமே இருக்க கூடாது . கையில அவசர தேவைக்கு மட்டும் கொஞ்சம் போல காசு வைச்சுக்கிட்டு, மீதி எல்லாத்துக்கும் தங்கம் வாங்குங்க.கொஞ்சம் கொஞ்சமா அது சேரட்டும். அவசரத்துக்கு தங்கம் போலஅம்மா அப்பா கூட உதவி செய்ய முடியாது.
இன்னைக்கு நீங்க பத்து ரூபாய்க்கு வாங்குறது, ரெண்டு வருஷத்துல பல மடங்கு உயர்ந்து நிற்கும்.



அதோட நிக்காம, ஒரு நாலு / அஞ்சு லட்சத்துக்கு நீங்க வாங்குன தங்கத்தோட  மதிப்பு வந்தததும், அப்படியே, நீங்க இப்போ இருக்கிற ஊருக்கு பக்கமா, இல்லை உங்க சொந்த ஊரு... ( சரி, சரி .....நீங்க பொறந்த ஊருக்கு பக்கமா) நிலத்தை வாங்கிப் போடுங்க...

தங்கத்தை வித்து... இல்லை அப்படியே பேங்க்ல வைச்சு.... அதுக்கு நீங்க ரொம்ப கம்மியா வட்டி கட்டினா போதும்.... நீங்க, வாங்குற நிலம் சந்தேகமே இல்லாம, சில வருஷத்துக்குள்ளவே கண்டிப்பா ரெண்டு மடங்கு ஆகும்....
நீங்க வாங்குற சம்பளத்தை காட்டிலும், நீங்க சம்பாதிக்கும் விகிதத்தைக் காட்டிலும், பல மடங்கு அந்த நிலத்தின் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும்.

சொந்த வீடுங்கிற நிலைமை தாண்டி , நிஜமாவே சொந்த ஊருங்கிற ரேஞ்சுக்கு நீங்க தாராளமா யோசிக்கலாம். 
    
அந்த நண்பர், நான் வாங்குற சம்பளத்துல பாதி கூட இப்போ வாங்கலை. உடனே நான் காலரை தூக்கி விட்டுக்க முடியாது. ஏன்னா, அவர் வாங்கிப் போட்டு இருக்கிற நிலத்தை, நான் இன்னும் முப்பது வருஷம் உழைச்சாலும், என்னால வாங்க முடியாது.

அவர் இன்னைக்கு நினைச்சா, நாலு கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கலாம். எனக்கு நாலு லட்ச ரூபாய் பேங்க் லோன் கொடுக்க, எல்லா வங்கியுமே கொஞ்சம் மேலேயும், கீழேயும் பார்க்கும். சம்பளம் நல்லா தான் இருக்கு சார். ஆனா, சிபில் ஸ்கோர் ரொம்ப கம்மி . (இதைப் பத்தி பெரிய கட்டுரையே எழுதலாம், வாய்ப்பு இருந்தால் )

ஆனா, நண்பர் இன்னைக்கு 'பேங்க்' க்கு லோன் போனா, கோடி ரூபாய்க்கு லோன் சாங்க்ஷன் பண்ண போட்டி போடுவாங்க. அவருக்கு இருக்கிற சொத்து மதிப்பு அப்படி. கிரெடிட் கார்ட் கிடையாது. யாருக்கும் செக் கொடுக்க மாட்டார். அதுனால செக் பவுன்ஸ் ஆகாது....

படிச்சது சாதாரண டிப்ளோமா தான். பதினெட்டு வருஷ சர்வீஸ்.  வாங்குற சம்பளம் வருஷத்துக்கு பத்து லட்சத்துக்குள்ள தான். ஆனா, சொத்து மதிப்பு பத்து கோடிக்கும் மேல.... 

தான் சம்பாதிச்சு, நிலத்தை வாங்கி - அந்த நிலம் அவருக்கு எவ்வளவோ சம்பாதிச்சுக் கொடுக்குது.

நான் சொன்ன எதுவும் கட்டுக்கதை இல்லை , நிஜமா நம்ம மூளையை யூஸ் பண்ணினா, நாமளும் அரசியல் வாதிகளை விட நல்லாவே சம்பாதிக்கலாம். நல்ல விதமாகவே. 

என்னோட நண்பர் படிக்கிறப்போ பயங்கர அவுட் ஸ்டாண்டிங் எல்லாம் ஒன்னும் இல்லை. அபோவ் ஆவேராஜ் தான். ஆனா, நல்ல யோசனை சொன்னா உடனே அதை ஒப்புக்கிட்டு நடைமுறை படுத்துவார். சிந்திச்சா மட்டும் போதாது இல்லை. செயல் படுத்தனும், ரொம்ப வேகமா.....  என் நண்பர் பண்ணினார்.... நீங்களும் யோசிங்க....
நல்ல  சம்பாத்தியமோ, இல்லை அபரிமித விஷய ஞானமோ, இந்த உலகம் ஜெயிக்கிறவங்களுக்குத்தான்...... மத்த எல்லோரும் வேடிக்கை தான் பாக்கணும். நாம வேடிக்கை பார்க்க வந்து இருக்கிறோமா, இல்லை விளையாண்டு கலக்க போறோமாங்கிறதை நாம தான் முடிவு பண்ணனும்..!........

இதுல, அந்த நண்பர் ரொம்ப வேடிக்கையா சொல்றார். எல்லாம் நான் கொடுத்த யோசனையாம். பேருக்கு மட்டும் இல்லை, உண்மையிலேயே குருவாம்.... ! நான் எங்க போய் முட்டிக்க?


நன்றி , விடை பெறுகிறேன்.... மீண்டும் சந்திப்போம் ......!

Published on 10/02/2010  18:39

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.